தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட பல்வேறு தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

Prabha Praneetha
4 years ago
தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட பல்வேறு தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட பல்வேறு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

வன்முறைகளை ஊக்குவிக்கும் அரசாங்கத்திற்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு தமது உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், அரசியல்வாதிகள் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சுகாதார ஊழியர்களும் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணி வரை தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர், வைத்தியர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

பல ரயில்வே தொழிற்சங்கங்களும் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4