இராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையை விட்டு வெளியேறிய மகிந்த - வெளிநாடு செல்கின்றாரா?

Nila
4 years ago
இராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையை விட்டு வெளியேறிய மகிந்த - வெளிநாடு செல்கின்றாரா?

நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் அலரி மாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வெளியேறிச் சென்றுள்ளார்.

நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை அலரி மாளிகையை சுற்றியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை பலத்த இராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து மகிந்த வெளியேறியுள்ளார்.

எனினும் நேற்றைதினம் பிரதமர் அலுவலகத்திற்கு பணிக்காக சென்ற பலர் இன்னும் அங்கு சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அலரி மாளிகையை விட்டு வெளியேறத முடியாத நிலையில் நேற்று முதல் அங்குள்ளதாக அங்கு பணியாற்றும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ள மகிந்த வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் செல்லலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 

நைஜீரியாவில் இருந்து சிறப்பு விமானம் ஒன்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையில் தரையிறங்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4