ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன!

Mayoorikka
3 years ago
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளின் வீடுகள் தீ  வைத்து எரிக்கப்படுகின்றன!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற  உறுப்பினர்களின் வீடுகள் சிலவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதுடன், தீவைப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இந்திக அனுருத்தவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் நிமல் லன்சா எம்.பியின் வீடு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் “கோட்டா கோ கம“ மற்றும் “மைனா கோ கம“ என்பவற்றின் மீது மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, நாடு முழுவதும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் உடன் அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களுடன் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்கத்தின் ஆதரவாளர்களின் வாகனங்கள், வீடுகள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகளும் அடித்து நொறுக்கப்படுவதுடன், தீவைப்பு சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!