இராணுவம் மற்றும் அதிரடிப் படையினரின் கட்டுப்பாட்டில் காலி முகத்திடல்!
Mayoorikka
3 years ago

காலிமுகத்திடலில் தற்போது அதிகளவான இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு, பலத்த இராணுவப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இராணுவத்தினர் கடமையில் இருந்த போலீசாரை விலக்கிக் கொண்டு தமது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வர ணடவடிக்கை எடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தடுக்க தவறியதாக அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் குற்றம்சுமத்தி வருகிறார்கள்.



