உச்சக்கட்டப் பதற்றத்தில் கொழும்பு!: கோட்டா ஹோ கம” தரைமட்டமானது! பலர் வைத்தியசாலையில் (photos)
Mayoorikka
3 years ago

மஹிந்த ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தற்போது மோதல் இடம்பெற்று வருகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அங்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் பலர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக கோட்டா கோ ஹோம் என கோசமெழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜே.வி.பி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, கோட்ட ஹோ கமவுக்கு சற்றுமுன்னர் வருகைதந்தார். அவர், தனது கோபத்தை கடுமையாக வெளிப்படுத்தினார்.
கோட்ட ஹோ கம முற்றாக அழிக்கப்பட்டது. அவ்விடத்தில் நிலைமை மிகவும் பதட்டமாக இருக்கிறது.







