அரசியல் இலாபங்களுக்காக நாட்டை அராஜகமாக்க விரும்பவில்லை: மஹிந்த விசேட உரை

Mayoorikka
4 years ago
அரசியல் இலாபங்களுக்காக நாட்டை அராஜகமாக்க விரும்பவில்லை: மஹிந்த விசேட உரை

அரசியல் இலாபங்களுக்காக நாட்டை அராஜகமாக்க விரும்பவில்லை என அவர் இன்று (09) தனது விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை. சவால்களை எதிர்கொண்டு சவால்களை சமாளிப்பதுதான் எனது கொள்கை. சவால்களை கண்டு தப்பித்து ஓடும் பழக்கம் எங்களிடம் இல்லை. அவற்றுக்கான முன்னுதாரணங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எதிர்க்கட்சிகள் அதன் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுகின்றன. அவர்களுக்குத் தேவையானது அதிகாரம் மட்டுமே.

ஜனாதிபதிக்கு எவ்வித தடையின்றி முடிவெடுக்க முடியும்.

பொதுநலன் கருதி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார்.

நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கைதான் என்னை அரசியலுக்கு வர வைத்தது.

இப்போது என்ன செய்வது என்று நான் உங்களிடம் கேட்கிறேன்.

உங்களுடன் ஒரு முடிவுக்கு வர நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மக்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், தம்மை நம்பி இந்த நாட்டில் உள்ள 69 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணையை மீற தாம் எண்ணம் கொண்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

தாய்நாட்டை முன்னிறுத்தி முதலாவதாக, இரண்டாவதாக, மூன்றாவதாக முன்னெடுக்கும் இந்த அரசியல் இயக்கத்தை விட்டு விலகும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், சவால்களை முறியடித்து மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு தன்னால் இயன்றதை தொடர்ந்து செய்வேன் என்று பிரதமர் மேலும் கூறினார்.

இதேவேளை, இன்று முற்பகல் பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து அலரி மாளிகை முன்பாக கூடிய குழுவினரால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை தொடர்ந்து அங்கு பதற்ற நிலையும் ஏற்பட்டிருந்தது.

 
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4