விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி மருந்துகள் வடக்கில் இல்லை!!
#SriLanka
#Jaffna
#Hospital
Mugunthan Mugunthan
3 years ago

விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி மருந்துகளான ஏஆர்வி மற்றும் ஏஆர்எஸ் என்பவை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏஆர்வி மருந்துகள் வடக்கு மாகாண மருத்துவமனைகளில் குறிப்பிட்டளவு உள்ள போதும் ஏஆர்எஸ் தடுப்பூசி மருந்துகள் இல்லை என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
நாய்களைக் கண்டால் விலகிச் செலலுங்கள். நாய்க்கடிக்கு உள்ளாகினால் விலங்கு விசர் நோய் தடுப்பூசி மருந்து தட்டுப்பாட்டினால் உயிர்களைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாய்க்கடிக்கு உள்ளாகியவர்களுக்கு ஏஆர்பி மற்றும் ஏஆர்எஸ் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படாவிடின் நீர்வெறுப்பு நோய்க்கு உள்ளாகி உயிரிழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



