இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் கலந்துரையாடல் இன்று ஆரம்பம்!
Mayoorikka
3 years ago

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) இடையிலான மெய்நிகர் கலந்துரையாடல்கள் இன்று ஆரம்பமாகி ஜூன் 23 ஆம் திகதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அவசர நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் IMF அதிகாரிகளை சந்தித்த போது இலங்கை பிரதிநிதிகள் அவசர நிதி தொடர்பாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும்,நாடு தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடுவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது.



