இன்று இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் விசேட கூட்டம்!
#SriLanka
#Parliament
#Meeting
Reha
3 years ago

நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் விசேட கூட்டம் ஒன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் 10 மணிக்கு இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில் விவாதிப்பதற்குரிய தினம் குறித்து இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது.
இதுதவிர, கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பிலும் விரிவாக ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



