பாகிஸ்தானில் பிணத்தை தோண்டி பாலியல் உறவு செய்த கொடூரர்கள்

#Pakistan #Death #Sexual Abuse
Prasu
3 years ago
பாகிஸ்தானில் பிணத்தை தோண்டி பாலியல் உறவு செய்த கொடூரர்கள்

உலகில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்கின்றன. இவ்வாறு தவறு செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் கூட ஆங்காங்கே சில அத்துமீறல் சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன

பாகிஸ்தான் நாட்டின் குஜ்ராத் அருகே சாக் கமலா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கல்லறை தோட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் மாற்றுத்திறன் மற்றும் லேசாக மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் மே 4ம் தேதி இறந்தார். அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தி குடும்பத்தினர் கல்லறை தோட்டத்தில் புதை்தனர்.

மறுநாள் அவர்கள் சில மத சடங்குகளை மேற்கொள்ள கல்லறை தோட்டம் சென்றனர். அப்போது பெண் புதைக்கப்பட்டு இருந்த இடம் தோண்டப்பட்டு இருந்தது. உள்ளே இருந்த பெண்ணின் உடல் மாயமாகி இருந்தது. உடலை அவர்கள் தேடினர். அப்போது 200 மீட்டர் தொலைவில் உடல் கிடந்தது.

மேலும் பெண்ணின் உடலுடன் உடலுறவு செய்ததற்கான அடையாளங்கள் தெரிந்தன. இதை பார்த்து அவர்கள் அதிர்ந்து போயினர். இதுபற்றி குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். இருப்பினும் புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர் என்பது தெரியவில்லை.

முதற்கட்டமாக சந்தேகத்தின் அடிப்படையில் 17 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் துணை பொது செயலாளர் அட்டாதுல்லா தாரர் கூறியுள்ளார். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் அல்ல. 2021ல் கடற்கரை நகரமான குலாமுல்லாவுக்கு அருகே மவுல்வி அஷ்ரப் சாண்டியோ கிராமத்தில் சிலல நபர்கள் இதுபோன்ற காட்டுமிராண்டி செயலை செய்திருந்தனர். 2019ல் கராச்சியின் லாந்தி டவுன் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் இத்தகைய கொடூர சம்பவம் நடந்திருந்தது. 2011ல் கராச்சியின் வடக்கு நாஜிமாபாத்தை சேர்ந்த முஹம்மது ரிஸ்வான் என்ற கல்லறை தோட்ட ஊழியர் 48 பெண்களின் சடலங்களோடு உறவு செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!