பெண்கள் முழுவதுமாக பர்தா அணிய வேண்டும்- தலிபான் உத்தரவு

#Pakistan
Prasu
4 years ago
பெண்கள் முழுவதுமாக பர்தா அணிய வேண்டும்- தலிபான் உத்தரவு

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியப் பிறகு பெண்களுக்கு கடுமையான விதிகளை விதித்து வருகிறது. இந்நிலையில், பொது இடங்களில் வரும் பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என்று தலிபான் அதிரடி கட்டளையை விதித்துள்ளது.

இதுகுறித்து தலிபானின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா பிறப்பிட்ட ஆணையில் கூறியிருப்பதாவது:-

பெண்கள் அனைவரும் தலை முதல் கால் வரை மறைக்கும் பர்தாவை பொது இடங்களில் அணிய வேண்டும். அது பாரம்பரியமானது மற்றும் மரியாதைக்குரியது.

வாலிபர்களை சந்திக்கும்போது தேவையில்லாத கோபங்களைத் தவிர்ப்பதற்காக ஷரியா உத்தரவுகளின்படி, மிகவும் வயதான அல்லது இளைமையாக இல்லாத பெண்கள் கண்களைத் தவிர முகத்தை மறைக்க வேண்டும். பெண்களுக்கு வெளியில் முக்கியமான வேலை இல்லை என்றால் வீட்டிலேயே இருங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4