ரணிலின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: அரசு.

Prabha Praneetha
4 years ago
ரணிலின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: அரசு.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாதுகாப்பு வழங்க தலையிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேகுணவர்தனவிடம் சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது வீட்டை சுற்றி வளைக்கும் திட்டம் இருப்பதாகவும், அப்படியானால், உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தமக்கான பாதுகாப்பை வழங்க தலையிடுமாறும் விக்ரமசிங்க தெரிவித்ததாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சபையில் கூறப்படும் அறிக்கைகள் தொடர்பாக எந்தவொரு அரசியல் கட்சியும் எந்தவொரு எம்.பி.யையும் மிரட்டுவது ஜனநாயக நடைமுறையல்ல என்றார்.

ஒரு குழு தனது வீட்டை சுற்றி வளைக்க திட்டமிட்டுள்ளதாக திரு.விக்கிரமசிங்க கூறியதை அடுத்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4