இலங்கையில் கொடூரம் ஆறு மாத குழந்தையை கிணற்றிற்குள் வீசிக் கொன்ற தாய்!
Nila
3 years ago

சீதுவ – துன்முல்லவத்தை பிரதேசத்தில் 6 மாத பெண் குழந்தையை கொலை செய்து, கழிவறை குழியில் வீசிய பெற்றோரை சீதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 3ஆம் திகதி இந்த கொலை நடந்தது.
சிசுவை கழுத்தை நெரித்துகொலை செய்த தாயார், சடலத்தை கிணற்றில் வீசியுள்ளர்.
மாலையில் கணவர் வீட்டுக்கு வந்து, குழந்தையை பற்றி விசாரித்த போது, குழந்தையை கிணற்றில் போட்டதாக தாய் தெரிவித்துள்ளார்.
மனைவியை காப்பாற்றுவதற்காக கிணற்றிலிருந்து சடலத்தை எடுத்த கணவன், அதை கழிவறை குழியில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையின் தாய் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



