கொழும்பு -கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்ற நிலை,புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்.

#SriLanka #Railway #Lanka4
Shana
4 years ago
கொழும்பு -கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்ற நிலை,புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பதற்ற நிலை உருவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பு-கோட்டையிலிருந்து இரம்புக்கனை மற்றும் பொல்காவலை நோக்கி பயணிக்கும் இரவுநேர புகையிரதங்களும், மருதானையிலிருந்து அளுத்கம நோக்கி பயணிக்கவிருந்த புகையிரத சேவையும் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதோடு, அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், புகையிரத சாரதிகள் இல்லாததன் காரணமாக இரவு நேர புகையிரத சேவைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4