ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெருமளவான பிக்குமாரினால் ஜனாதிபதி மாளிகை சுற்றிவளைப்பு!

#SriLanka #Protest #Lanka4
Reha
4 years ago
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெருமளவான பிக்குமாரினால் ஜனாதிபதி மாளிகை சுற்றிவளைப்பு!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெருமளவான பிக்குமார் உள்ளிட்ட குழுவினர் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பிரவேசித்துள்ளனர்.

கொழும்பு கோட்டையில் உள்ள டச்சு வைத்தியசாலை வழியாகச் சென்ற குறித்த குழுவினர், மத்திய வங்கிக்கு முன்பாக உள்ள நுழைவாயிலை திறந்து கோட்டை ஜனாதிபதி மாளிகை பகுதிக்கு பிரவேசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத விதமான இந்த அத்துமீறலை குறித்த சந்தர்ப்பத்தில் கோட்டை ஆர்ப்பாட்டப்பகுதியை அண்மித்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியாமல் போனதுடன், தற்போது, அங்கு காவல்துறை கலகமடக்கும் பிரிவினர் மற்றும் தண்ணீர்தாரை பிரயோக வாகனங்கள் என்பன வரவழைக்கப்பட்டுள்ளன.

இந்த திடீர் பிரவேசம் காரணமாக கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4