தமிழகம் செல்ல முற்பட்ட வவுனியா வாசிகள் யாழ்.அல்லைப்பிட்டியில் கைது!

#SriLanka #Tamil Nadu #Arrest
தமிழகம் செல்ல முற்பட்ட வவுனியா வாசிகள் யாழ்.அல்லைப்பிட்டியில் கைது!

தமிழகம் செல்ல முற்பட்ட வவுனியா வாசிகள் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வவுனியாவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சென்று , அல்லைப்பிட்டி கடற்பகுதி ஊடாக இந்திய செல்ல முற்பட்ட வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட நால்வரையும் சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களை இந்தியாவிற்கு அனுப்பவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்ட நபர்கள் தொடர்பிலான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!