மைனா கோ கம போராட்ட களத்துக்குள் நுழைந்த மர்மப் பெண்!

Mayoorikka
4 years ago
மைனா கோ கம போராட்ட களத்துக்குள் நுழைந்த மர்மப் பெண்!

கொழும்பில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மைனா கோ கம போராட்ட களத்துக்குள் மர்ம பெண் ஒருவர் உள் நுழைந்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

அலரிமாளிகைக்கு முன்பாக 8 ஆவது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில், ஒரு சில இளைஞர்கள் ஐந்து நாட்களாக உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த இளைஞர்களை இருந்த இடத்திற்கு வருகை தந்த பெண் ஒருவர் அங்கிருந்தவர்களை உண்ணாவிரதத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் உணவை உண்ணுமாறும் கோரியுள்ளார்.

இதனை அவதானித்த போராட்டக்காரர்கள் அந்த பெண்ணை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு கோரியுள்ளனர்.

மீண்டும் மீண்டும் அந்த உண்ணாவிரதத்தில் இருந்தவர்களை உணவை உண்ணுமாறு கோரிய போது, உண்ணாவிரரத்தில் இருந்த இளைஞர்களும் அந்த பெண்ணை திட்டி அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்து குறித்தப் பெண் அகன்று சென்று காலிமுகத்திடல் பகுதியில் இருந்து பொலிஸார் சிலருடனும் இனந்தெரியாத நபர்கள் சிலருடனும் மகிழ்ந்து கதைக்கும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவிவருகின்றது .

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4