வல்லையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் நடந்த கைகலப்பில் இளைஞன் குத்திக் கொலை!!

Reha
3 years ago
வல்லையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் நடந்த கைகலப்பில் இளைஞன் குத்திக் கொலை!!

பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதியில் வல்லையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் நடந்த கைகலப்பில் இளைஞர் ஒருவர் போத்தலால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.

திக்கம், நாச்சிமார் கோயிலடியைச் சேர்ந்த் 25 வயதான ஞானசேகரம் குணசோதி என்ற இளைஞரே கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட இளைஞரும், சிலரும் மதுபானம் அருந்துவதற்கு மதுபான விற்பனை நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

அங்கு மதுபானம் அருந்திக் கொண்டிருந்தபோது அங்கிருந்தவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

முரண்பாடு மோதலாக மாறியதில் போத்தலால் இளைஞர் குத்தப்பட்டுள்ளார். அவர் அங்கிருந்து மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

மதுபான விற்பனை நிலையத்தில் மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

கொல்லப்பட்ட இளைஞருடன் வந்தவர்கள் தொடர்பாகவோ, அங்கு இருந்தவர்கள் தொடர்பாகவோ தகவல் இல்லாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞரின் உடல் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நெல்லியடிப் பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!