நான்கு பேருக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என உறுதியளித்த ஜனாதிபதி

Prathees
4 years ago
நான்கு பேருக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என உறுதியளித்த ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தான் உட்பட  மேலும் நால்வருக்கும் பிரதமர் பதவி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தினேஸ் குணவர்தன தனக்கு நெருக்கமான பலருடன் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோருக்கு பிரதமர் பதவியை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக  குணவர்தன மிகுந்த விரக்தியுடன் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4