ராஜபக்சக்கள் என்னைக் கண்டு மிகவும் பயப்படுகிறார்கள்..: சரத் பொன்சேகா

Prathees
4 years ago
ராஜபக்சக்கள் என்னைக் கண்டு மிகவும் பயப்படுகிறார்கள்..: சரத் பொன்சேகா

ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் தம்மைப் பார்த்து அச்சமடைந்துள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பலனாக நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் தனக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதற்காகவே மைத்திரிபால சிறிசேனவுக்கு சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளதாக அவர் கூறுகிறார்.

இணைய சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4