பொலன்னறுவையில் பேருந்து - முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து: மூவர் பலி

Prathees
4 years ago
பொலன்னறுவையில் பேருந்து -  முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து:  மூவர் பலி

பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில் மனம்பிட்டி கொட்டாலிய பாலத்திற்கு அருகில் 
இன்று (01) காலை 6.30 மணியளவில் தனியார் பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக மன்னம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்கள் அரலகங்வில, அருணபுர பகுதியைச் சேர்ந்த  தம்பதிகள் மற்றும் பன்னிபிட்டிய பகுதியைச் சேர்ந்த உறவினர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கணவன் மற்றும் மனைவி 63 மற்றும் 62 வயதுடையவர்கள் மற்றும் இறந்த உறவினருக்கு 75 வயது. இதில் தம்பதியினர் சம்பவ இடத்திலும், உறவினர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

முச்சக்கரவண்டி அரலகங்விலவில் இருந்து மாத்தளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்தே  விபத்துக்குள்ளானது.

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மானம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4