நீர்கொழும்பில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 9 பேர் கைது

Prathees
4 years ago
நீர்கொழும்பில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 9 பேர் கைது

நீர்கொழும்பு - ஏத்துகல பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட மூன்று பெண்கள் உட்பட 9 பேர் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நீர்கொழும்பு பிரதேச குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று (30) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அவர்களிடம் இருந்து 1 கிராம் ஐஸ், 9 கிராம் ஹெரோயின், 350 மில்லிகிராம் கஞ்சா மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4