களுத்துறையில் இருந்து கொழும்புக்கு சிலுவையை சுமந்து செல்லும் ஓய்வு பெற்ற அதிகாரி

ஈஸ்டர் தாக்குதலின் சாபத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றும் நோக்கில் ஓய்வுபெற்ற உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர் ஒருவர் நேற்று (29) காலை 6.45 மணியளவில் களுத்துறையில் இருந்து கொழும்புக்கு சிலுவையைச் சுமந்து செல் ஆரம்பித்தார்.
ளுத்துறைஇ பலதொட்டஇ நந்துன் உயன பகுதியைச் சேர்ந்த கே.குயின்டஸ் பெரேரா, இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் பொது சுகாதார பரிசோதகராகவும் பின்னர் உணவு மற்றும் மருந்து பரிசோதகராக கொழும்பு பிரதேசத்தில் கடமையாற்றினார்.
களுத்துறை மேயர் வணக்கத்திற்குரிய லியோ கமில்லஸ் ஹெட்டியாராச்சி அவர்களுக்கு ஆசி வழங்கி களுத்துறை புனித சிலுவை தேவாலயத்திற்கு முன்பாக சிறு பிரார்த்தனையை நடத்தினார்.
களுத்துறை புனித சிலுவை தேவாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணியானது ஈஸ்டர் தினத்தன்று முதலாவது குண்டு வெடித்த கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நிறைவடையும்.
குவின்டஸ் பெரேராவின் மனைவி சேனா மெனிகேஇ களுத்துறை டெலிகொம் உதவி முகாமையாளர் மற்றும் அவரது மகன் கயான் விஸ்வநாத் ஆகியோர் இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.



