தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை கலைக்க முயற்சி?
Mayoorikka
3 years ago

தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அரசாங்கத்தை கலைத்துவிட்டு புதிய அரசாங்கம் அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தற்போது கருத்து தெரிவித்துள்ளன.
அனைத்துக் கட்சி அல்லது இடைக்கால அரசுகளுக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பிரேரணையை முன்வைக்கும் திட்டமொன்று அவர்கள் தரப்பிலிருந்து வெளிவருகின்றது.
எவ்வாறாயினும், மூன்று வருடங்கள் பதவியில் இருந்த பின்னரே பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.



