இலங்கைக்கு மேலும் அடி: சுற்றுலா பயணிகளின் வருகை 50 வீதம் குறைவு

Mayoorikka
4 years ago
இலங்கைக்கு மேலும் அடி: சுற்றுலா பயணிகளின் வருகை 50 வீதம் குறைவு

கடந்த 26 நாட்களில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைத் தெரிவித்துள்ளது.

அத்துடன், கடந்த மார்ச் மாதத்தில் 206,500 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாகவும், மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை சுமார் 50 வீதம் குறைவடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளின் நாளாந்த எண்ணிக்கை 3,600 இல் இருந்து 2 ஆயிரமாக குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, எதிர்காலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான ஹோட்டல் முன்பதிவு நடவடிக்கை சுமார் 50 வீதத்தினால் குறைவடையுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல்வேறு விமான நிறுவனங்கள் இலங்கைக்கான பயண செயற்பாடுகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சுற்றுலா சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4