நாடு முழுவதும் வாகன உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு - விலையும் உயர்வு

Mayoorikka
4 years ago
நாடு முழுவதும் வாகன உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு - விலையும்  உயர்வு

நாடு முழுவதும் வாகன உதிரிபாகங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கு நாட்டில் ஏற்பட்டுள்ள டாலர் நெருக்கடியே காரணம். சந்தையில் உதிரி பாகங்களின் விலை கூட வேகமாக உயர்ந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். தற்போதைய நிலைமை காரணமாக தமது தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணத்துவ முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் தலைவர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
  
உதிரி பாகங்கள் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு பகுதி பயணிகள் பேருந்து துறை.
  
உதிரி பாகங்கள் தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால், ஒட்டுமொத்த போக்குவரத்து துறையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4