பிரதமரும் நானும் சகோதரர்கள் எங்களை யாராலும் பிரிக்க முடியாது! ஜனாதிபதி

Nila
3 years ago
பிரதமரும் நானும் சகோதரர்கள் எங்களை யாராலும் பிரிக்க முடியாது!    ஜனாதிபதி

பிரதமருக்கு பதவி விலகுமாறு தாம் எந்த அறிவித்தலையும் வழங்கவில்லை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாது என ஜனாதிபதி நேற்று ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

ஆளும் கட்சி குழுவினர் நேற்று ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் கூடியுள்ளனர்.

தவறான கருத்துக்கள் பரவுவதை தடுக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் கட்சியை பிளவுபடுத்துவதை தான் எதிர்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது அடுத்த பிரதமர் யார் என்பது தொடர்பில் தொடர்ந்து கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ள நிலலையில், “பிரதமரும் நானும் சகோதரர்கள் என்பதால் யாராலும் பிரிக்க முடியாது” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டாம் என அரசாங்கத்தின் மேலும் இரண்டு பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால், தாமரை மொட்டு கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் எதிர்க்கட்சியில் இணைந்து நாமல் ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக இருவரும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!