எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Mayoorikka
4 years ago
எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதாக தெரிவித்துள்ள சுகாதார மேம்பாட்டு அலுவலகம் எனினும்  புதிதாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இலங்கையில் இதுவரை 3700 பேர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், கடந்த வருடம் 410 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகி​யோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, சுற்றுலாப் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டமையே எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைய காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4