கேகாலை வைத்தியசாலை மலசலகூடத்தில் பெண்ணொருவரை வீடியோ எடுத்த இளைஞர் கைது

Prathees
4 years ago
கேகாலை வைத்தியசாலை மலசலகூடத்தில்  பெண்ணொருவரை  வீடியோ எடுத்த இளைஞர் கைது

கேகாலை பொது வைத்தியசாலையில் உள்ள பெண்கள் மலசலகூடத்திற்கு சென்ற  பெண்ணை வீடியோ எடுத்த நபர் ஒருவர் கேகாலை பொலிஸாரால் நேற்று (26) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பன்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய திருமணமானவர் ஆவார்.

ரம்புக்கன பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனமொன்றில் உயர் பதவியை வகிக்கும் 30 வயதுடைய திருமணமாகாத பெண்ணொருவர் நேற்று (26) காலை தனது தாயாருடன் கேகாலை பொது வைத்தியசாலைக்கு வைத்திய அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்காக வந்திருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வை;தியசாலையின் வெளிநோயாளர்  பகுதியில் அமைந்துள்ள  பொது மலசல கூடத்திற்கு தனது தாயுடன் குறித்த பெண் சென்றுள்ளார். 

ஆண்களுக்கும்  பெண்களுக்கும் பல பல தனித் தனி மலசலகூடங்கள்  உள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பெண் தனது தாயிடம் மலசலகூடத்தின் முன் மூலையில் இருக்குமாறு கூறிவிட்டு பெண்கள் மலசலகூடத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் மலசலகூடத்திற்குள் நுழைவதை இளைஞன் ஒருவர் பார்த்ததாகவும்இ அருகில் உள்ள ஆண்களுக்கான மலசலகூடத்திற்குச் சென்று கதவை மூடிவிட்டு பக்கத்து மலசலகூடத்தில் இருந்த பெண்ணை  தனது தொலைபேசியில் பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் பக்கத்திலுள்ள மலசலகூடத்திற்கு மேலே  தொலைபேசியைப்  பார்த்த பெண்இ  வெளியில் வந்து கேகாலை பொது வைத்தியசாலையின்  பொலிஸாருக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞன் மிகவும் பிரயத்தனப்பட்டு மலசலகூடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும்இ இது தொடர்பில் கேகாலை பொது வைத்தியசாலையின் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலை பொது வைத்தியசாலை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் நிஹால் குலசிங்க சந்தேகநபரையும் அவரது 3,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியையும் கைப்பற்றியுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் நேற்று (26) மாலை கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4