அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி இணக்கம!

Nila
4 years ago
அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி இணக்கம!

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் பங்கேற்புடன், அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தமது இணக்கத்தை, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறியப்படுத்தியுள்ளார்.

கடிதம் மூலம் ஜனாதிபதி இதனை அறியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியதன் பின்னர்  அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் தான் இணங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, முதல் கட்டாக எதிர்வரும் 29ஆம் திகதி விசேட கூட்டத்திற்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கட்டமைப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4