இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது உலக வங்கி

Prathees
4 years ago
இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது உலக வங்கி

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி 600 மில்லியன் டாலர் நிதி உதவியை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.

முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் விடுவிக்கப்படும் என உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி சியோ கண்டா தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று (26) பிற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே திருமதி சியோ காந்தா இதனைத் தெரிவித்தார்.

மருந்து மற்றும் சுகாதாரத் தேவைகள், சமூகப் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் எரிவாயு தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதாகவும் உலக வங்கி பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4