உலகில் பணவீக்கம் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்த இலங்கை!

Nila
4 years ago
உலகில் பணவீக்கம் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில்  மூன்றாவது இடத்தை பிடித்த இலங்கை!

மிக  மோசமான பட்டியலில் உலகிலேயே மூன்றாவது இடத்தை இலங்கை பிடித்துள்ளது. உலகின் பணவீக்கம் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் முறையாக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
 
இந்த பட்டியலில் 6வது இடத்தில் இருந்த இலங்கை தற்போது உலகில் மிக மோசமான நிலையில் இருந்த வெனிசுலாவை தாண்டி மூன்றாவது இடத்தை இலங்கை பிடித்துள்ளது.
 
பெப்ரவரி மாதம் 17.50 வீதத்தில் இருந்த இலங்கையின் பணவீக்கம்  21ஆம் திகதி வெளியான பட்டியலில் 119 சதவீதத்தை எட்டியுள்ளது.
 
இதேவேளை, அமெரிக்க பொருளாதார வல்லுநர் ஸ்டீவ் ஹான்கே இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
 
அதில், “இந்த வார பணவீக்க அட்டவணையில், இலங்கை மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏப்ரல் 21ஆம் திகதியன்று, நான் இலங்கையின் பணவீக்கமான 119 சதவீத்தை வான் அளவு உயர்வாக கூறினேன். 
 
பணவீக்கத்தை கட்டுப்படுத்த மற்றும் ரூபாயை சேமிக்க, இலங்கை 1884 முதல் 1950 வரை இருந்ததைப் போன்ற ஒரு நாணய சபையை நிறுவ வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4