நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு இளைஞர்களின் கருத்துக்களும் அவசியம் - ரணில்

#Ranil wickremesinghe
Reha
4 years ago
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு இளைஞர்களின் கருத்துக்களும் அவசியம் - ரணில்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு இளைஞர்களின் கருத்துக்களும் அவசியம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம், அமைச்சரவை என்பவற்றின் அதிகாரங்களுடன் இளைஞர்களின் யோசனைகளையும் பெற்றுக்கொள்வது தொடர்பில் தாம் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு மேலதிகமாக கண்காணிப்பு மற்றும் நிதி பரிபாலன குழுக்களுக்கு 3 இளைஞர்கள் வீதம் உள்வாங்கப்பட வேண்டும்.

இளைஞர்கள் தங்கள் யோசனைகளை சமூக வலைத்தளங்களில் முன்வைப்பதுடன் சபாநாயகருக்கும் அனுப்பி வைக்க முடியும்.

அந்த கருத்துக்களை பெற்று மீண்டும் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு கலந்துரையாட முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4