சோப்பு - வாஷிங் பவுடர் விலை 200 சதவீதத்தால் அதிகரிப்பு

Prathees
4 years ago
சோப்பு - வாஷிங் பவுடர் விலை 200 சதவீதத்தால் அதிகரிப்பு

சவர்க்காரம்  மற்றும் அதுசார்ந்த பொருட்களின் விலை சுமார் 200 சதவீதம் வரை உயரும் என சவர்க்கார நிறுவனங்கள் வர்த்தக சமூகத்தினரிடம் தெரிவித்துள்ளன.

தற்போது சவர்க்காரம்  மற்றும் சலவை தூளுக்கு சந்தையில் அதிக கிராக்கி இருப்பதாகவும், தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் வணிகர்கள் கூறுகின்றனர்.

சில பகுதிகளில் சோப்பு மற்றும் சலவை தூளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அடுத்த சில நாட்களில் சவர்க்காரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் விலையை அதிகரிக்கப்போவதாக விற்பனையாளர்கள் விற்பனையாளர்களை எச்சரித்துள்ளதால், விலை உயர்வுக்கு முன்னதாகவே நுகர்வோர் சவர்க்காரம் மற்றும் அது தொடர்பான பொருட்களை பதுக்கி வைக்கத் தொடங்கியுள்ளதாக வர்த்தக சமூகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பிரபல சவர்க்காரமான  கன்லையிட் சவர்க்காரம்135 ரூபாயாக உயர்ந்துள்ளது.

74 ரூபாயாக இருந்த ஒரு பேபி சோப், தற்போது 175 ரூபாயும்  75 ரூபாயாக இருந்த டுகைநடிழல சோப், தற்போது 145 ரூபாய் வரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4