மகிந்த அல்லது சஜித் யார் பிரதமரானாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை: நிமல் சிறிபால

Prathees
4 years ago
மகிந்த அல்லது சஜித் யார்  பிரதமரானாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை: நிமல் சிறிபால

உத்தேச இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களால் நியமிக்கப்படும் எந்தவொரு நபருடனும் இணைந்து செயற்பட சுயேச்சை நாடாளுமன்ற குழு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச அல்லது சஜித் பிரேமதாச பெரும்பான்மையுடன் பிரதமராக பதவியேற்றாலும் பரவாயில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண யாருடனும் இணைந்து செயற்படத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4