ஜப்பானில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்தது- 26 பேர் மாயம்

#Accident #Death
Prasu
3 years ago
ஜப்பானில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்தது- 26 பேர் மாயம்

ஜப்பானில்  24 பயணிகள், 2 ஊழியர்களுடன் சென்ற  சுற்றுலாப் படகு இன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. ஹொக்கைடோவின் வடக்குத் தீவில் உள்ள ஷிரெடோகோ தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரை பகுதியில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் படகுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. படகில் பயணித்தவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 

கடலோர காவல் படையினர் 8 ரோந்துப் படகுகளில் அப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 7 மணி நேரத்திற்கும் மேலாகியும் படகில் சென்றவர்களில் ஒருவரும் உயிருடன் கண்டறியப்படவில்லை என கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!