நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிக்கும் வரை மின்வெட்டு தொடரும்

#SriLanka #Power #Time
நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிக்கும் வரை மின்வெட்டு தொடரும்

நாட்டில் தற்போது பெய்து வரும் மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகபட்ச கொள்ளளவை எட்டும் வரை மின்சார விநியோகத்தை அவ்வப்போது நிறுத்த வேண்டியிருக்குமென இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

தற்போது 25 சத வீத மின்சாரம் நீர் மின் நிலையங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும், மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து 900 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படுமெனவும் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் டி.சி.ஆர். அபேசேக்கர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று (22) 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின் வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4