மகிந்த உயிரிழந்து விட்டதாக சர்ச்சையை ஏற்படுத்திய சமூகவலைத்தளப் பதிவுகள்

Nila
4 years ago
மகிந்த உயிரிழந்து விட்டதாக சர்ச்சையை ஏற்படுத்திய சமூகவலைத்தளப் பதிவுகள்

தான் உயிரிழக்கவில்லை எனவும் எந்த நோயினாலும் பாதிக்கப்படவில்லை எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரதமர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்து விட்டதாகவும் இணையத்தளங்களில் நேற்றிரவு முதல் தகவல்கள் பரிமாறப்பட்டு வந்தன.
 
எனினும் சமூகவலைத்தளங்களில் பரவிவரும் பிரசாரம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
பிரதமர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்தக் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4