கஞ்சா மற்றும் ஜஸ் போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது

#SriLanka #drugs #Arrest #Women
Prasu
4 years ago
கஞ்சா மற்றும் ஜஸ் போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது

மட்டு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட மற்றும் ஜஸ் போதைப்பொருளுடன் இரு பெண்களை நேற்று வெள்ளிக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைதான கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்ணிடமிருந்து 23 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒனறினையடுத்து சம்பவதினமான நேற்று (22) இரவு வாழைச்சேனை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் பிறைந்துறைச்சேனையில் குறித்த விட்டடை முற்றுகையிட்டனர். இதன்போது கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 31 வயதுடைய பெண் ஒருவரை 23 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்தனர்

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டபோது ஜஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவரையும் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தன

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4