புதிய விளையாட்டுத்துறை அமைச்சரின் கலந்துரையாடலில் பங்கேற்காத மஹேல மற்றும் சங்கக்கார

Prathees
4 years ago
புதிய விளையாட்டுத்துறை அமைச்சரின் கலந்துரையாடலில் பங்கேற்காத  மஹேல மற்றும்  சங்கக்கார

புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் தேனுக விதானகமகே தலைமையில் நேற்று (22) தேசிய விளையாட்டு சபையின் முன்னாள் உத்தியோகத்தர்களை கூட்டி நடைபெற்ற கலந்துரையாடலில் தேசிய விளையாட்டு சபையின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன மற்றும் தேசிய விளையாட்டு சபையின் முன்னாள் உறுப்பினர் குமார் சங்கக்கார ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

நேற்று முற்பகல் 10.30 மணியளவில் விளையாட்டு அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு தேசிய விளையாட்டு சபையின் முன்னாள் தலைவர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இருவரும் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பயிற்சியாளர் குழுவில் இணைக்கப்பட்டுள்ளதால், அவர்களை ஜூம் டெக்னாலஜி மூலம் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை.

விளையாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் தொடர்ந்தும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ளாத நிலையில் அவர்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் கலந்தாலோசிப்பது மிகவும் பொருத்தமானது என கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் அமைச்சருக்கு பதிலளித்தனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாகவும்இ இது தொடர்பான விடயங்கள் எதிர்காலத்தில் அமைச்சரினால் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4