கோப் குழுவுக்கு அழைக்கப்பட்ட ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ்

#SriLanka
Prasu
4 years ago
கோப் குழுவுக்கு அழைக்கப்பட்ட ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக அந்நிறுவனம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப் குழு) அழைக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் (பேராசிரியர்) சரித ஹேரத் தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆஜராகுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

21 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஏலத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை கோப் குழு முன்னிலையில் அழைக்கவுள்ளதாக கோப் குழுவின் தலைவர் கடந்த 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4