இந்திய-சீன சுவையான சில்லி சிக்கன் குழம்பு சமைத்துப்பாருங்கள்.

#Cooking #Chicken #curry
இந்திய-சீன சுவையான சில்லி சிக்கன் குழம்பு சமைத்துப்பாருங்கள்.

தேவையான பொருட்கள் :

  • சிக்கன் – ½ கிலோ
  • தயிர் – ½ கப்
  • பூண்டு – 6 பல்
  • குடைமிளகாய் – 2
  • பச்சை மிளகாய் – 2
  • தக்காளி – 1
  • வெங்காயம் – 1
  • கொத்த மல்லி – சிறிதளவு
  • இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
  • கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – 1½ தேக்கரண்டி
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

  1. முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன், தயிர் அரை தேக்கரண்டி, உப்பு, மஞ்சள்த் தூள் போட்டு நன்றாக கலந்து பிரிட்ஜில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. வெங்காயம், தக்காளி, கொத்த மல்லி, குடை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறவும். பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய விட்டு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். 
  5. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 
  6. இதனுடன் பிரிட்ஜில் ஊற வைத்த சிக்கனை போட்டு ஐந்து நிமிடங்கள் வரை வதக்கவும். அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  7. தக்காளி வதங்கி யதும் மிளகாய்த் தூள் சேர்த்து கிளறவும். தொடர்ந்து 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். சிக்கன் பாதியளவு வெந்தவுடன் குடை மிளகாயைச் சேர்க்கவும். 
  8. சிக்கன் நன்றாக வெந்தவுடன் குழம்பில் நறுக்கிய பூண்டு, கரம் மசாலாத் தூள் 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். கடைசி யாக கொத்து மல்லி தூவி இறக்கவும். சுவையான சில்லி சிக்கன் குழம்பு தயார்.