இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்தவாரம் முதல் அதிகரிப்பு!

#SriLanka #Milk Powder #Lanka4
Reha
4 years ago
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்தவாரம் முதல் அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பால் மா கையிருப்பு குறைவடைந்துள்ளதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட பால் மா கையிருப்பு அடுத்த வாரம் தீர்ந்து விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, பால் மாவின் புதிய கையிருப்பு கிடைத்த பின்னர், உரிய விலை திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு விலைகள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டதுடன், அதன்படி 400 கிராம் பால் மா பொதியின் விலை ரூபா. 250 மற்றும் 1 கிலோ பைக்கட்டின் விலை ரூ. 600 ஆக அதிகரிக்க தொழிற்சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. விலை உயர்வால் தற்போது 400 கிராம் பால் மா பைக்கட் ரூ.790க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ ரூ. 1945.ஆகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4