கதிர்காமம் பிரதேச சபைத் தலைவர், உப தலைவர் உட்பட 4 பேர் விளக்கமறியலில்

Prathees
4 years ago
கதிர்காமம் பிரதேச சபைத் தலைவர், உப தலைவர் உட்பட 4 பேர் விளக்கமறியலில்

கதிர்காமத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் மோதலை ஏற்படுத்திய கதிர்காமம் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் உட்பட நால்வரை விளக்கமறியலில் வைக்க திஸ்ஸமஹாராம நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி தரிந்து சமீர சில்வா நேற்று (21) உத்தரவிட்டார்.

நேற்று முன்தினம் (20ம் திகதி) இரவு சுமார் 7.00 மணியளவில் கதிர்காமம் பிரதேச சபை உறுப்பினர் பாத்திய பால்ல்லவத்தை என்பவருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்ததையடுத்து  நேற்று பிற்பகல் கதிர்காமம் வைத்தியசாலை மற்றும் தெபரவெவ ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த நீதவான் சந்தேக நபர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

கதிர்காமம் பிரதேச சபையின் தலைவர் சானக அமில் ரங்கன, உப தலைவர் டி. வி. சாந்த, பிரதேச சபை உறுப்பினர் பாத்திய கால்லவத்த மற்றும் தலைவருடன் வந்ததாக கூறப்படும் மற்றொருவர் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதலில் கதிர்காமம் பிரதேச சபையின் தலைவர் சானக்க அமில் ரங்கன காயமடைந்துள்ளதுடன், அவருடன் சென்றதாக கூறப்படும் ஒருவர் கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4