சைவப் பிரியர்களுக்கு இலகுவான வத்தல் பிரியாணி சமைப்பது எப்படி?

#Cooking #Vegetable #Biryani
சைவப் பிரியர்களுக்கு இலகுவான வத்தல் பிரியாணி சமைப்பது எப்படி?

தேவையானவை:

  • பாசுமதி அரிசி - ஒரு கப்,
  • மணத்தக்காளி வத்தல் - ஒரு டீஸ்பூன்,
  • சுண்டைக்காய் வத்தல் - 8,
  • மோர் மிளகாய் - 5,
  • சுக்கங்காய் வத்தல் - 8,
  • பாகற்காய் வத்தல் - 5,
  • அரிசி வத்தல் - கைப்பிடியளவு,
  • வெங்காய வத்தல், ஜவ்வரிசி வத்தல் - சிறிதளவு,
  • கறிவேப்-பிலை - சிறிதளவு,
  • நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

  1. கடாயில் எண்ணெய் விட்டு... ஒவ்வொரு வத்தலையும் தனித்தனியாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடிக்கவும்.
  2. குக்கரில் நெய் விட்டு, ஊற வைத்த அரிசியைச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். வத்தலிலேயே உப்பு இருப்பதால் அளவாக உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு, வத்தல்களை போட்டு குக்கரை மூடவும். 
  3. மிதமான தீயில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆவி போனதும், திறந்து பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை தூவி கலக்கிப் பரிமாறவும்.