பசில் ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்கும் அபாயம்: விமல் எச்சரிக்கை

Mayoorikka
4 years ago
பசில் ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்கும் அபாயம்: விமல் எச்சரிக்கை

கோட்டாபய ராஜபக்ச தற்போதைக்கு ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் என ஜாதிக நிதஹஸ் பெரமுனவின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி விலகினால், அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் தற்போது தலைமறைவாக உள்ள பசில் ராஜபக்ச வந்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டி ஜனாதிபதியாக பதவியேற்கும் அபாயம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, ஜனாதிபதியை சிறையில் அடைத்துவிட்டு சில காலம் முன்னோக்கிச் செல்வதையே செய்ய வேண்டும் என்றார்.

பிரதமர் உள்ளிட்ட தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4