இலங்கையில் மீண்டும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது! சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு

Mayoorikka
4 years ago
இலங்கையில் மீண்டும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது! சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு

இன்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
 
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை கடந்த 18ஆம் திகதி முதல் நீக்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், குறித்த தீர்மானம் தற்போதைய நிலைமையில் ஏற்புடையதல்ல என பல்வேறு தரப்பினரும் தெரிவித்திருந்தனர்.

எனவே, இந்தத் தீர்மானத்தை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு நிபுணர் குழுவுக்கு சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட பரிசீலினைகளை அடுத்து பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4