ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

Prabha Praneetha
4 years ago
 ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.

இந்த குழுவில் சுமார் 13 பேர் உள்ளடங்குவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“சர்வகட்சி” அரசாங்கத்தை அமைக்குமாறு கோரி கடந்த செவ்வாய்கிழமை ஜனாதிபதியிடம் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதாக கடிதத்தில் கையொப்பமிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4