ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பு!

Reha
4 years ago
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில்  காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பு!

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் காவல்துறைமா அதிபர் மற்றும் பல சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நாளை (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைக்களுக்கமைய, காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர், மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர், கேகாலை மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், கேகாலை மற்றும் ரம்புக்கனை காவல்நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4