தேயிலைத் தொழிற்சாலையில் திடீரென பரவிய தீ

Prathees
3 years ago
தேயிலைத் தொழிற்சாலையில் திடீரென பரவிய  தீ

இராகலை தோட்ட தேயிலைத் தொழிற்சாலையில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 பொதுமக்கள் மற்றும் நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு படையினரின் உதவியுடன்  தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மின்சார ஒழுக்கு காரணமாக தொழிற்சாலையின் தேயிலைத் தூள் பதனிடும் அடுப்பில் இருந்து பாரிய தீ ஏற்பட்டுள்ளதால் அடுப்பு இயந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிர் ஆபத்துக்களோ, காயங்களோ ஏற்படவில்லை.  

மதியம் இரண்டுமுறை மின்சார தடை ஏற்பட்டமையால் அடுப்புக்கான மின்சாரம் அதிகரித்த நிலையில் திடீர் தீ ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!